• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்

ByA.Tamilselvan

Oct 16, 2022

பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, மோதல் என்று தொடங்கி தற்போது காதலில் வந்து நின்றிருக்கிறது.தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6 வது சீசன் கடந்த 9ம் தேதிதொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியையும் 5 சீசன்களை போலவே பிக்பாஸ் -6யும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.20போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஜி.பி முத்துவுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது நடவடிக்கைகள் மீம்ஸ்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, மோதல் என்று தொடங்கி தற்போது காதலில் வந்து நின்றிருக்கிறது. நேற்று போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் காதலை வெளிப்படுத்திக்கொள்வது போலநடித்து விளையாடினர்.அப்போது ஜனனியிடம் மணிகண்டனும்,அசல் கோளாரும் காதலை சொன்னார்கள். பின்னர் ஆயிஷாவிடம் ராம் காதலை சொல்வதுபோல நடித்தார். வீட்டிற்குள் உண்மைக்காதல் ஏதும் மலர்ந்தது போல தெரியவில்லை.