புதுக்கோட்டை மாநகராட்சியில் இன்று இந்த வருடத்துக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் துணை மேயர் யாக்கத் அலி மாநகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 60 வார்டுகள் உள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர் இதில் புதுக்கோட்டை 14 வது வார்டு கவுன்சிலர் காந்திமதி பிரேம் ஆனந்த் தன்னுடைய வார்டு பிரச்சினைகளை மேயர் திலகவதியிடம் விவாதித்தார் இதில் முக்கியமாக தெரு நாய்கள் பிரச்சினைகள் மற்றும் போஸ் நகர் பகுதியில் மக்களின் தேவையான சொத்து வரி பெயர் மாற்றம் ஒரு சிலருக்கு மட்டும் செய்யப்பட்டது எப்படி… அனைவருக்கும் செய்து கொடுக்க வேண்டுகிறேன்…
புதுக்குளம் உள் புறம் குருங்காடுகள் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்… மேலும் ராஜா குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நிறைவடையாமல் வேலையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது இதை ஆறு மாத காலம் மேல் சொல்லியும் நேரில் வருவதாக கூறினீர்கள் இன்னும் வரவேயில்லை… நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் நேரடி நியமனம் செய்த மாற்றுத்திறனாளி மாமன்ற உறுப்பினரை கடைசி வரிசையில் அமர வைக்காமல் முன் வரிசையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்




