தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் , டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது!
மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர் 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பெண் வாக்காளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 800 மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின்பு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. 85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு. நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தாலும் அவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.