
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பூமாலை சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அரசியல் டுடே தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் அரசியல்டுடே இயக்குனர் தா.பாக்கியராஜ், ஆசிரியர் ப. கவிதாகுமார், ஆலோசகர்கள் ஜெ. துரைராஜ், அ. க .இலக்குவன், திருச்சி மண்டல அரசியல்டுடே பொறுப்பாளர் தி.வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அரசியல்டுடே டிவியின் லோகோவும், அரசியல்டுடே இணையதளத்திற்கான அதிகாரப்பூர்வ லோகோவும் இன்று வெளியிடப்பட்டது.
நம் தொடர் நிகழ்வாக அரசியல்டுடே சார்பாக, தமிழக முழுவதும் வந்திருந்த செய்தியாளர் கூட்டம் பெரம்பலூர் அரியலூர் ரோட்டில் உள்ள எம்.எஸ்.ஆர் ரெஸ்டாரண்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.
