அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பகலில் கோவில் சாவியை திருடி நல்லிரவில் உண்டியலை கொள்ளையடித்து கொள்ளையர்கள் பூட்டை திறந்து உண்டியல் திருட்டு அவனியாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ளது. கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் இதன் அருகில் பத்ரகாளியம்மன் கோவில் கிராம பொதுமக்கள் கோயிலாக உள்ளது இங்கு பிச்சை சாமி(வயது 68) என்பவர் பூசாரியாக பணிபுரித்து வருகிறார்.
நேற்று காலை 5.30 மணியளவில் கோவில் நடை திறந்து பூஜைக்கு பின் பகல் 12 மணி அளவில் கோவிலில் அடைத்த சாவியை தேடி உள்ளார். அப்போது காணாமல் போய் உள்ளது. இதனை எடுத்து வீட்டில் இருந்த மாற்று சாவி மூலம் கோவிலை பூட்டி சென்று மீண்டும் மாலை 4 மணிக்கு திறந்து இரவு 9 மணி அளவில் கோவில் நடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கோவில் திறந்து இருப்பதாக அருகில் உள்ளவர்கள் பிச்சை சாமிக்கு தகவல் அளித்தனர்.

கோவிலில் சென்று பார்த்தபோது கோவில் கதவு திறக்கப்பட்டு கோவிலில் உள்ள உண்டியல் திருடப்பட்டிருந்தது மேலும் அம்மன் கழுத்தில் உள்ள தாலியை கழட்டுவதாக முயற்சி செய்து அது முடியாத நிலையில் கொள்ளையர் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
மேலும் உண்டியலை திருடிய பின்பு கூட்டும் சாவியையும் கோயில் வாசலிலே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் திருட்டு சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர். சாவியை திருடி நள்ளிரவில் கோயிலில் உண்டியல் கொள்ளை அடித்த சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
