• Sun. Sep 8th, 2024

பணம் பறிக்கும் லோன் ஆப்கள்… உஷாரா இருங்க….

Byகாயத்ரி

Jun 17, 2022

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் ஆப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளரின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வருகிறது. இது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக லோன் ஆப்கள் பெருகி வருகின்றன. அந்த ஆன்லைன் லோன் ஆப்களில் கடன் பெற உங்கள் புகைப்படத்துடன் அப்ளை பண்ண சொல்வார்கள். உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சிலர் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்கள் புகைப்படத்தை தவறாக மார்பிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி உங்களிடம் பணம் பறிப்பார்கள். உங்களின் நிம்மதி போய்விடும்.

இந்த போட்டோ உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். இப்படி ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கவைத்து உங்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற புகார்கள் அதிகரித்து வருகின்றனர். காவல்துறை மூலம் இந்த செயலி களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்துகொண்டுதான் இருக்கும். நீங்கள் ஏமாற கூடாது என்பதற்காக சில செய்திகளை சொல்கிறோம். ஆகிய செயலிகள் மோசடியான செய்யக்கூடியவை. இவற்றை ஒருபோதும் டவுன்லோடு செய்யாதீர்கள். மேலும் ஒரு வேளை உங்கள் போனில் இருந்தால் நீக்கி விடுங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *