புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் காரைக்கால் மாவட்டம் தலதெருவில் உள்ள தீபாய்ச்சியம்மன் ஆலயத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட பசுமாடுகள், கிடாரிகள், வண்டி மாடுகள், எருமை மாடுகள், கறவை மாடுகள் மற்றும் சேவல்கள், வான்கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் இடம்பெற்றனர். இதில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் கால்நடைகள் கண்காட்சியினை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடைகளுக்கு அமைச்சர் திருமுருகன் பரிசுகளை வழங்கினார்.
