சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக – எம்.எல்.ஏ சுந்தர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியை கலைஞர் செம்மொழி திருநாள் என்று அறிவிக்க வேண்டும். சென்ற வருடம் மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம், தோப்பு புறம்போக்கு ஆகிய இடங்களில் வசித்தவர்கள் கணக்கை அரசு எடுத்தது. இதனிடையில் கிராம நத்தத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. அதேபோன்று மேய்க்கால் புறம்போக்கு, தோப்பு புறம்போக்கு, தரிசு நிலங்களில் குடியிருப்போருக்கு, சிறப்பு அரசாணை வெளியிட்டு பட்டா வழங்க வேண்டும். இதையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன், மேய்க்கால் நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்பின் திமுக சுந்தர், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், வாலாஜாபாத் தாலுகாக்களில், ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய் துறை சார்பாக பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசு கணக்கில் பட்டா ஏறாமல் இருக்கிறது. இதன் காரணமாக வீடுகட்ட முடியாத நிலை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது, இதற்கு முன்பு அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்குவர். அதனை கணக்கில் ஏற்றுவதில்லை, இடத்தை காண்பிப்பதும் இல்லை. சென்ற 15 வருடங்களாக இந்தநிலை இருக்கிறது. அதனை சரிசெய்து வருகிறோம். பின் சுந்தர் பேசியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாலுகாக்களை பிரிக்க வேண்டும். உத்திரமேரூர் தாலுகாவில்124 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. இதனை உத்திரமேரூர், சாலவாக்கம் என 2ஆக பிரிக்க வேண்டும். மேலுகம் உழவர் பாதுகாப்பு அட்டையை புதிதாக வழங்க வேண்டும். நரிக்குறவர் இனமக்கள் தங்களது துப்பாக்கிகளுக்கு உரிமம்பெற சிரமப்படுகின்றனர். ஆகவே அவர்களுக்கான உரிமம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் சர்வேயர் பற்றாக்குறை இருப்பதால், போதிய சர்வேயர்களை நியமித்து பயிற்சியளிக்க வேண்டும் என்று விவாதம் நடைபெற்றது.