• Sat. May 4th, 2024

விஜயகாந்த்துக்கு வந்த திடீர் டவுட்.. விளக்கம் கேட்டு முதல்வருக்கு அறிக்கை

குருவிக்கார சமூகமும், குறவர் இனமும் வேறு என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இனத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ எவர் ஒருவரும் பாரபட்சத்துடன் நடத்தப்படக் கூடாது என்பதை இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவே வரித்து கொண்டுள்ளது.

ஆனாலும், இன்னும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.. அதேசமயம், நரிக்குறவ சமூகத்தவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு பிரதான இடங்களில் பங்களிப்பும் முக்கியத்துவமும் இல்லாமல் உள்ளது.

இதற்கு திமுக அரசுதான் ஒரு முடிவு கட்டி வருகிறது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள பூஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள் குடியிருப்புகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் முதல்வர்.. இச்சமூகத்தினருக்கான உரிமைகள், சலுகைகளை அறிவித்தும், அவர்களின் வீடுகளுக்கு திடீரென விசிட் அடித்தும் உணவருந்தியும் அந்த சமுதாயத்தின் மக்களின் மனதில் பாலை வார்த்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..

இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த்துக்கு திடீரென ஒரு டவுட் வந்துவிட்டது.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அது இதுதான்: “குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த்துக்கு திடீரென ஒரு டவுட் வந்துவிட்டது.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்டகிய கோரிக்கை வைத்துள்ளார். அது இதுதான்: “குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.

மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து ஊசிமணி, பாசிமணி விற்கும் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமுதாயத்தின் தலைமுறைகள், அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது. குருவிக்கார சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்கிறது.

அதேசமயம் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவர் சமுதாயத்தினர் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே குறவர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்கார சமூகத்தையும் குறவர் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நல திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *