• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ByL. YOGESHWARI

Dec 8, 2022

பவானி ஊராட்சிக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளரின் சாதி வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளர் செல்வராஜை செயற்பொறியாளர்கள் சண்முகசுந்தரம், தேவராஜ் ,பரமேஸ்வரன் ஆகியோர் சாதியின் பெயரை சொல்லி இழிவு படுத்தி இருக்கிறார்கள் இவர்களை வன்மையாக கண்டித்தும் ,நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மின்வாரிய அலுவலர் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மண்டல செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். கோபி திட்ட செயலாளர் சிவக்குமார், திட்ட தலைவர் பஞ்சயன், திட்ட செயலாளர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர், மாநிலத் துணைச் செயலாளர் பகுத்தறிவன் கண்டன யுரையாற்றினார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் முனுசாமி, மகேந்திரன், ராமச்சந்திரன், ஆற்றலரசு, திருமா குணவளவன், இளஞ்சுடர், ஈஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, முடியரசன், பழனிச்சாமி, சீத்தாகௌரி, சுப்புலட்சுமி, ஸ்டெல்லா, நாகராஜ், செந்தமிழ் வளவன், பிரேம்குமார், செல்லக்கண்ணு, பட்லூர் அருண், பவானி கண்ணன் உள்ளிட்ட கட்சியை சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.