• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு கடிதம்…

Byகாயத்ரி

Mar 19, 2022

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் உள்ளிட்ட சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் சமத்துவம் குறித்தும், பள்ளியில் தனக்கு ஏற்பட்ட தீண்டாமை அனுபவங்கள் குறித்தும் சிறுமி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து நரிக்குறவர் சமூக மக்களுடன் காணொலி வாயிலாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளை அழைத்து நேரில் பேசினார். அப்போது தங்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென மாணவிகள் வலியுறுத்திய நிலையில், உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ”தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரன் உள்ளிட்ட சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.