
சமீபத்தில், கேப்டன் விஜயகாந்த் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிப்பை தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார், கேப்டன்! சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
