• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம்: அமித்ஷா

ByA.Tamilselvan

Jun 11, 2023

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இன்று மாலை வேலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முன்னதாக சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம்.
இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் தி.மு.க. வரும் காலங்களில் ஒரு தமிழரை பிரதமராக்க உறுதி எடுப்போம். மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.