

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் என உளறினார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
