• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குறைவான தூக்கம், குறைவான நடை – இது தான் இந்தியா

Byத.வளவன்

Jan 6, 2022

உலகிலேயே குறைவாக ஆழ்ந்த நித்திரை செய்ப்பவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியர்கள் சராசரியாக 7 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனராம். இதை தவிர உலகிலேயே குறைவாக நடப்பவர்களும் இந்தியர்கள் தான் என்பது தான் அடுத்த அதிர்ச்சியான செய்தி. இந்தியர்கள் சராசரியாக 6500 தடவை மட்டுமே தங்கள் கால்களை தூக்கி நடப்பதாவும் இது உலகிலேயே குறைந்த நடை அளவு என்றும் சொல்லப் படுகிறது.

என்ன பிரச்சனை இந்தியர்களிடம்?

நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வாறு, எப்படி தூங்குகிறோம் என்பதே முக்கியம். பொதுவாக குழந்தைகள் 9 மணி நேரம் வரை தூங்குவது தேவையானது.வயது வந்தவர்கள் 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம். ஆனால் ஜப்பானியர்கள் இந்தியர்கள் விட குறைவாகவே அதாவது 6 மணி 47 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக சொல்லுகிறது ஒரு புள்ளிவிபரம். இதை சொல்லியிருப்பது உலக அளவில் பிரபலமான பிட் பிட் எனும் நிறுவனம். கிட்டத்தட்ட 18 நாடுகளில் 10 பில்லியன் மக்களிடம் சென்று ஆய்வு நடத்தியுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியா, அர்ஜென்டினா, சிலி, ஆஸ்ட்ரேலியா, கனடா, பிரான்ஸ்,ஜெர்மனி, அயர்லாந்து, ஹாங்காங்,ஸ்பெயின், இங்கிலாந்து, அமேரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியர்களும், ஜப்பானியர்களும் தான் மந்தமான அமைதியற்ற தூக்கத்தில் இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர். கடந்த வருடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இவர்கள் வெறும் 77 நிமிடங்கள் மட்டுமே ஆழ்ந்து தூங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் தூங்கும் இரவு நேரத்தில் 57 நிமிடங்கள் தூங்காமல் விழித்திருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக தூங்கும் ஒருவருக்கு கனவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.அவர்களது கருவிழிகள் மேலும் கீழும் அசைந்து கொண்டே இருக்கும். இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை அடைய சற்று நேரமாகும். ஆழ்ந்த தூக்கத்தை அடைந்த பிறகே அவர்களது நினைவு அவர்களை விட்டு பிரியும். உடலில் நடக்கும் புரத தொகுப்பு மற்றும் செல்கள் செயல்பாடு சீராகும்.

பொதுவாக 70 முதல் 90 வயது ஆனவர்கள் 6 மணி நேரமே தூங்கும் நிலையை அடைவார்கள். அனால் இளையவர்கள் இவர்களை விட மேலும் அதிக நேரம் தூங்கும் அளவுக்கு அவர்களுக்கு அவர்களுக்கு உடல் நிலை இடம் கொடுக்கும். ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு அடுத்து சிங்கப்பூர் போன்ற நகரங்களில் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்கள் உள்ளனர். மொத்தத்தில் இந்தியர்கள் மாதிரி சோம்பேறிகள் மற்றும் ஆழ்ந்து நித்திரை செய்யாதவர்கள் உலகில் மிகக் குறைவு தான் என்பதே உண்மை. அதிக நேரம் நடத்தல் மற்றும் ஆழ்ந்த நித்திரை செய்தல் போன்றவை உடல் நலனை பேணும் என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்.