வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ரொட்டி கடை பாறை மேடு பகுதியில் கடந்த வாரம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பிடிக்க வந்த சிறுத்தையை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. அறிந்ததே!! தற்போது நேற்று இரவும் அதே பகுதிக்கு வந்துள்ள சிறுத்தை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

மேலும் வீட்டில் வளர்க்கக்கூடிய ஆடு மாடு கோழி நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பிடிப்பதற்காகவே உலா வருகிறது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வரும் நிலையில் அப்பகுதியில் வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
