• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உதகை அருகே ஹயாகா சென்ற சிறுத்தை- வைரல் வீடியோ

கன்னேரிமுக்கு, எடக்காடு சாலையில் ஹயாகா சென்ற சிறுத்தை வாகன ஓட்டிகளை பார்த்து உறுமியது
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


உதகையை அடுத்த கன்னேரிமுக்கு கிராமத்தில் இருந்து எடக்காடு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இன்று பகல் நேரத்திலேயே சிறுத்தை ஒன்று ஹாயாக சாலையில் நடந்து சென்றது. மேலும் சாலையின் ஓரத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் சற்று நேரம் அமர்ந்து வாகன ஓட்டிகளை பார்த்து உறுமியவாறு தேயிலை தோட்டத்திற்க்குள் சென்று மறைந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டுநர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.