மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷன் துவக்கி வைத்தார்..
உதகை சிறப்பு மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நீலகிரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையேன 3வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.இப்போட்டியில் 15 பள்ளிகளில் இருந்து 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் சிறப்பு குழு பிரிவு போட்டிகளில் சென்னை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு பிரிவு குழு போட்டியில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வேல் கம்பு, வாள் கேடயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.