• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

போட்டாவுக்கு போஸ் கொடுத்து அமர்ந்த சிறுத்தை

ByG. Anbalagan

Apr 17, 2025

எடுத்துக்க என்ன எவ்வளவு நேரம் வேணாலும் வீடியோ எடுத்துக்க நான் பயந்து ஓட மாட்டேன் என சிறுத்தை வீடியோ எடுத்தவருக்கு போஸ் கொடுத்து அமர்ந்து முறைத்து பார்த்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த சிறுத்தை வீடியோ எடுத்தவருக்கு போஸ் கொடுத்து அமர்ந்து முறைத்து பார்த்தது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் உதகை சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகள் அதிகமாக சுட்டுத் திரிகின்றன குறிப்பாக தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரியும் சிறுத்தைகள் தேயிலை செடிகளுக்குள் அதிகமாக ஓய்வெடுக்கின்றன.

இந்த நிலையில் கூடலூர் அருகே மேல் கூடலூர் கோக்கால் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை தலைப்பகுதி மட்டும் தெரியும்படி, ஓய்வெடுத்து இருந்தது. அப்போது சாலை வழியாக சென்ற வாகன ஊட்டி சிறுத்தையை வீடியோ பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த சிறுத்தை ஓடாமல் ஒய்யாரமாக வீடியோவுக்கு போஸ் கொடுத்தது. தனது செல்போனில் close upப்பாக சிறுத்தையை வீடியோ பதிவு செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது .