• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்..,

ByK Kaliraj

Jul 18, 2026

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான விருதுநகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாடார் மகாஜன சங்கம் சார்பாக நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிவருமான லெஜன்ட் சரவணன் கலந்துகொண்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக நாடார் மகாஜன சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் மகாஜன சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.