• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோடை வெயிலின் தாக்கத்தால் வறண்டு போன குற்றால அருவிகள்

Byவிஷா

Apr 29, 2024

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, குளு குளு என்று இருக்க வேண்டிய குற்றால அருவிகள் வறண்டு போய் கிடப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வழக்கமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவி, வறண்டு, பாறையாக காட்சி அளிக்கிறது.
இருப்பினும், அமைதியாக இருக்கும் குற்றால அருவியைக் காண சில சுற்றுலா பயணிகள் செல்கின்றர். இந்நிலையில், குற்றால சீசன் தொடங்கும் முன்பு, பெண்கள் உடைமாற்றும் அறை, கழிவறை, பூங்கா உள்ளிட்டவற்றை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.