புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீரு நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கி உள்ளனர்.

அந்த மனுவில் கீழப்பட்டி துவார் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றோம் எங்கள் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனியார் ஒருவர் சாலையை மறைத்து அடைத்து வைத்து கொண்டு உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் உடல்களை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நபரிடமிருந்து மீட்டு தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)