• Thu. Apr 25th, 2024

நீலகிரி அருகே அருள் மிகுஸ்ரீ மஹாசகத்தி மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா

பந்தலூரை அடுத்துள்ள அத்திகுன்னா 1வது பிரிவில் உள்ள அருள் மிகுஸ்ரீ மஹாசகத்தி மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடை பெற்றது பக்தர்கள் பரவசம்
.பந்தலூரை அடுத்துள்ள அத்திகுன்னா 1வது பிரிவில் உள்ள அருள் மிகுஸ்ரீ மஹாசகத்தி மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் .மார்ச் .3,4,5,வெள்ளி சனி ஞாயிறு போன்ற நாட்களில் நடைபெற்றது.
இதன் தொடக்க நாளான.3-3-23,அன்று காலை 5,மணிக்கு கணபதிஹோமம் அதனை தொடர்ந்து கொடியேற்றுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபேற்றது.4-3-23,அன்று காலை பத்து மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் பகல் ஒருமணிக்கு அன்னதானம் .இதனை தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு விமான கலஸ்தாபிதம் எல்வகை மருந்து சாற்றுதல் யந்திரஸ் தாபனம் அஸ்டபந்த மருந்துசாற்றுதல் இரவு ஏழுமணிக்கு அன்னதானம்.5-3-2023.அன்று ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் வரும் சிம்மலக்கனத்தில் கோபுரம் கலசங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் மஹா அபிஷேகமும் நடை பெற்றது .இதனை சுவாமி விஸ்னு. ஸ்ரீஅல்ராஜ் கனநாதன் .கோவை ராஜ சர்மா போன்றோர் நடத்தி வைத்தனர் .


கும்பாபிஷேக நிகழ்ச்சியினை தர்மகர்த்தா கருப்பையா தலைவர் குமார். செயலாளர் ராஜா. பொருலாளர் ராஜன் . துனை தலைவர் ராஜேஸ்.ஆலோசகர் அர்ஜீனன் .துனை செயலாளர் ராமன் மற்றும் ஊர் பொது மக்கள். விழா சிறப்பாக நடை பெற திமுக வார்டு கவுன்சிலரும் விவசாய தொழில் நுட்ப அனி செயலாளர் ஆழன் போன்றோர் இனைந்து ஏற்பாட்டை செய்தனர் . மூன்று நாள் அன்னதான உபயம் மதிப்பிற்குரிய சென்னை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஐயா நாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார் ..அத்திகுன்னா ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மனின் கோவில் 1978ல் சிறு ஓடுகலாம் அமைக்கப்பட்ட கோவிலாக இருந்தது பின்பு 1988ல் இதன் கட்டுமானம் எழுப்பப்பட்டது இந்த கோவில் 110 வருட பழைமையான கோவில் அதன் பின் வளர்ச்சி பெற்றது.
இந்த கோவிலின் சிறப்பு அம்சத்தையும் அற்புதம் நடந்ததை பற்றியும் இந்த கோவிலிள் பனியாற்றுகிற விஸ்னு அல்ராஜ் கூறுகையில் இந்த கோவிலுக்கு வரும் சிலர் வாய் பேசமுடியாதவர்களுக்கு பேச்சு வந்தது நடக்க முடியாத வர்கள் எழுந்து நடந்தது, வேலைவாய்பை பெற்றவர்கள் தொழில் முன்னேற்றம் போன்றவை இங்கு கண் முன் நடந்ததாக கூறினார். சொல்ல போனால் கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி ஐயா அவர்களுக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்த கோவில் இது என பெருமையுடன் கூறினார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *