திருப்பரங்குன்றம் ஜூலை 22-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கும்பாபிஷேகம் நடந்த நாள் முதல் தொடர்ந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மண்டல பூஜை வரை கூடுதலாக தினமும் 2 மணி நேரம். தரிசனத்திற்கு ஒதுக்கப்படுமா? என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது.

லட்சக்கணக்கானபக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14 -ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் 48 நாட்களுக்குள் சாமிதரிசனம் செய்தால் கும்பாபிஷேகத்தை கண்டபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 15, 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் 5 நாளில்மட்டும் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம்பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இருப்பார்கள் என்று கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். குன்றமே குலுங்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் 20-ந் தேதி ஆடிக்கார்த்திகை தினமாகும். இந்த நாளில் கடந்த காலங்களில் ஆடிக்கார்த்திகையையொட்டி பக்தர்களின் வருகையை ஒப்பிடும்போது இதுவரை இப்படி ஒரு கூட்டம் இல்லை என்று சொல்லுமளவிற்கு குன்றமே குலுங்கியது.
கோவில் வாசல் முன்பு திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோவிலுக்குள் செல்ல முடியமாலும்,கூட்டத்தை விட்டு வெளியேற முடியாமலும் பக்தர்கள் தினறினர். கூட்ட நெரிசல் இருந்து கைக் குழந்தைகள் மற்றும் முதியோார்களை மீட்டுபதில்என்ன செய்வது? என்று புரியாமல்கோவில் நிர்வாகமும்,போலீசார் திகைத்தனர். மேலும் அவர்கள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்குள் போதும் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.
இதற்கு காரணம் கடந்த 3 மாதத்திற்கு மேலாக கோவிலின் கருவறையில் சாமி தரிசனம் செய்யாதாது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக பக்தர்கள்வருகை, முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கார்த்திகை தினம். 48 நாட்களுக்குள் தரிசனம் செய்தால் கும்பாபிஷேகம் கண்ட தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆகவேதான் அளவு கடந்த கூட்டம் குவிந்தது.மண்டல பூஜை வரை பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய விழாக்கள் நாளை 22-ந் தேதி பிரதோஷம்,24-ந் தேதி அமாவாசை, 28-ந்தேதி ஆடிப்பூரம் அடுத்த (ஆகஸ்டு) மாதம் 8-ந் தேதி பவுர்ணமி, 9-ந்தேதி ஆவணி அவிட்டம், 15-ந் தேதி உலக நலன் வேண்டி 1008 திருவிளக்கு பூஜை என்று அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வருகிறது. இந்த நாளிலும் கடந்த காலங்களை காட்டிலும் பக்தர்களின்வருகை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. தரிசனத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுமா?
மதுரை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமாகபக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதையொட்டி மண்டல பூஜை வரை வழக்கமான நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு பகல் 2 மணி வரை பக்தர்களின்தரிசனத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட வேண்டும். இதே போல இரவிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் 10.30 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.இந்த தருணத்தில் பக்தர்களுக்கு தேவைக்கேற்பபஸ் வசதி செய்யப்பட வேண்டும் என்றுபக்தர்களிடையேஎதிர்பார்ப்பு நிலவுகிறது.