திருப்பரங்குன்றம் திருகூடல் மலையில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் திரு கூடல் காகபுஜண்டர் மலையில் அமைந்துள்ள மாயாண்டி சுவாமிகள் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோவிலில் புதிதாக தண்டபாணி சுவாமி, கூடல் நாயகர், கூடல் அம்பிகை , பள்ளி கொண்ட பெருமாள் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த ஆறாம் தேதி வியாழக்கிழமை சோமப்பா ஸ்வாமி ஜீவசமாதி திருக்கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் யாகசாலை பூஜை துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜையில் இன்று கபட பூஜை கோ பூஜை ஆறாம் கால யாகசாலை பூஜை முடித்து பூர்ணாகுதி தீபாரணையுடன் கோவில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய யாக சாலையிலிருந்து மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியம் முழங்க கலச குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் மலைமேல் உள்ள தண்டபாணி சுவாமி திருக்கோவில் கூடல்நாயகர் கூடல் அம்பிகை பெருமாள் கோவிலில் உள்ள கலசங்களுக்கு கலச நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருகூடல் மலை மேல் அமைந்துள்ள தண்டபாணி திருக்கோயில் உள்ளிட்ட 4 கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூட்டுக்கோல் இராம லிங்க விலாசம் அறக்கட்டளை நிர்வாகி தட்ஷிணாமூர்த்தி செய்திருந்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூடல் நாயகர் கூடல் அம்பிகை கும்பாபிஷேகம் நடைபெற்றது