கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக பொன். இராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசின் இரண்டு துறைகளில் இணை அமைச்சராக (செல்வம் கொழிக்கும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறையின்) அமைச்சர் என்ற நிலையில், ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், பார்வதிபுரம், மார்த்தாண்டம் என இரண்டு பாலங்களும் சாலை விரிவாக்கத்தின் உள்ளடக்கமானது.
கன்னியாகுமரிதிருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை NH_47 சாலையின் முக்கிய பகுதியான மார்த்தாண்டம் பகுதி என்பது காலை 7மணி முதல் இரவு 9மணிவரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அன்றைய நாளில்.மேம்பாலம் என்பது தவிர்க்க முடியாத நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் இடங்களை அரசு கையகபடுத்தியதில், சில குறிப்பிட்ட இடங்களை அரசு உடமையாக்காது தவிர்த்தது. அந்த நாளிலே ஒரு பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில் ஆட்சி, அதிகாரம் என்ற நிலையில் மார்த்தாண்டம் பாலம் பணிகள் தொடங்கிய போதே அதன் வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியதில் முதல் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் கொல்கத்தாவில் இதை போன்ற வரைபடத்துடன், வடிவத்தில் கட்டப்பட்ட பலம் பணி முடிந்த சில நாட்களில் இடிந்து தரைமட்டமான செய்தி ஊடகங்கள், தினசரி நாள் இதழ்களில் படத்துடன் செய்தி வெளிவந்த காலத்தில் தான். மார்த்தாண்டம் பாலம் சிமெண்ட் தூண்களுக்கு மேல் இரும்பு பாளத்தில் ஸ்பிரிங் இணைப்பு உடன் ஆன பாலம் கட்டப்பட்டது.
மார்த்தாண்டம் பாலம் திறந்த தினத்தில் பெரும் மக்கள் கூட்டம் மட்டும் அல்ல அன்றைய ஒன்றிய இணை அமைச்சர் பொன்னார், மற்றும் பாஜகவின் பிரபலங்கள் எல்லாம் பாலத்தில் மேற்கில் இருந்து கிழக்கிலும் நடை பயின்றனர். பொன்னாரின் சாதனை, பாஜகவின் சாதனை என்று அன்று ஒரு பரப்புரையும் செய்யப்பட்டது.
பாலம் திறந்த அடுத்த நாள் பாலத்தில் பேரூந்துகள் இயங்க தொடங்கிய போது பாலத்தில் ஒரு அசைவின் தன்மை வெளிப்பட்டது (கொல்கத்தாவில் இடிந்த இதை போன்ற பாலமும் குமரி மக்களின் நினைவில் வந்து போனது)
காலம் ஓடியது தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்னார் தோல்வி அடைந்து வசந்த குமார் வெற்றி பெற்றார்.
பொன்னாரின் தோல்வியால் அன்றைய அரசு குமரி மாவட்ட சாலைகளின் பணிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியை தொடர்ந்து கொடுக்காது காலம் கடத்தி வந்தது.(பாஜகவின் தோல்வியால் ஒன்றிய அரசின் ஓர் வஞ்சகம் என்ற பேச்சு பொது வழியில் பரவியது.
வசந்த குமார் நாடாளுமன்றத்தில் இது குறித்து பல முறை பேசினார். துறை சார்ந்த அமைச்சர் நிதின் கட்கரியிடம் வசந்த குமார் மனு கொடுத்தார்.
சில மாதங்களுக்கு முன் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒரு பகுதி சிதைந்து தூவாரம் ஏற்பட்டது முதல் தடவை பல நாட்கள் பேரூந்துகள் மட்டும் அல்ல எந்த வாகனங்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டது.
பாலம் பாதித்த பகுதியை நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் காங்கிரஸ், பாஜகவினர் அந்த இடத்தில் திரண்டது அப்போது குமரியில் உச்சம் தொட்ட பெரும் விவாதமாக இருந்தது. குமரி மாவட்ட மக்கள் அந்த பாலம் சிதைவை மறந்து வந்த நிலையில்.
சில நாட்களுக்கு முன் மீண்டும் புதிதாக பாலத்தின் மற்றொரு இடத்தில் சிதைவுகள் ஏற்பட்டு இப்போதும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாலம் பழுதடைந்த இடத்தில் விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் சிதைவுகள் ஏற்பட்ட இடத்தில் மெழுகு திரிகளை ஏற்றி வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய நேரத்தில். பாலத்தை உருவாக்க காரணமாக இருந்த அன்றைய அமைச்சர் பொன்னாரும் அந்த இடத்தில் இருந்தது ஒரு எதிர் பாராத நேரம்.
விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட், பொன்னார் இடையே ஒரு விவாதமும் நடந்தது. மார்த்தாண்டம் பாலம் சிதைவு பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
மேம்பாலத்தை உருவாக்கிய ஒப்பந்தம் நிறுவனம் பாலத்தின் ஆயுள் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கொடுத்த காலத்தின் அளவு எவ்வளவு என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை பாராமுகமாக இருப்பது குறித்து பொன்னார் வாய்திறக்க வேண்டும் என்ற ஒரு பொது விவாதம் குமரியில் வலம் வரும் நிலையில். குமரி மாவட்ட மக்களின் பொதுக் கருத்து.
கனிமங்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு தினம் 500_க்கு அதிகமான டிரக்குகள் பயணப்பட்டதே பாலத்தின் சிதைவுக்கு காரணம். பலம் சீர் செய்ய பட்டபின்பு அதிக பாரம் சுமந்து வரும் எந்த கனரக வாகனங்களும் மேம்பாலத்தில் பயணிப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்பதே குமரியை சேர்ந்த பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.