கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் இன்று மாலை (மே_28) தொடங்கிய குமரி கலைவிழா இன்று மாலை தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கலை விழா இன்று தொடங்கி எதிர் வரும் ஜீன் திங்கள் 1_ம் தேதி வரை தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடெபெறுகிறது.

இன்றைய விழாவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தமிழ் நாடு மாநில உணவு ஆணையம் தலைவர்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர்
மனோதங்கராஜ் ஆகியோர் பங்கேற்றதுடன், கலைநிகழ்ச்சிகளை
பார்வையாளர்களுடன் அமர்ந்து அமைச்சர்,மேயர், தமிழ்நாடு மாநில உணவு தலைவர், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் , கன்னியாகுமரி சுற்றுலா அலுவலர்
காமராஜ், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றார்கள்.