



சாமி தோப்பு அய்யாவழி தலைமை பதியின் நீண்ட நாள் கோரிக்கையை குமரி ஆட்சியர் அழகு மீனா நிறைவேற்றி உள்ளார்.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 4 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார். அந்நாளில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் 22-3-2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ஏற்கனவே இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அய்யா வழி பக்த்தர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய மூன்று மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களின் நடவடிக்கை. அய்யா வழி பக்த்தர்களால் பாராட்டப்படுகிறது.


