

கன்னியாகுமரியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் சார்பில், வீட்டுக் கடன் வழங்கும் திட்டம் குறித்து அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.
இந்திய அரசின் நிறுவனமான ரெப்கோ வங்கி வீடு சம்பந்தமான பல்வேறு எளிதான திட்டங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக வயது 70-வதை எட்டிய இரு பால் இனத்தவர்களும் வீட்டு கடனை பெறுகிற தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.20_லட்சம்வரை எவ்விதமான கணக்கு தாக்கல் விவரங்கள் கொடுக்க வேண்டியதில்லை. அடுத்த நிலையான ரூ.50 லட்சம் வரை கணக்கு தாக்கல் விவரங்கள் இரண்டு வருடங்கள் வரை போதேமானது. வரைபடம் அனுமதி இல்லாமலும் வீட்டு கடனை பெறமுடியும்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற வீட்டுக் கடன் திட்டங்கள் அறிமுகம் நிகழ்விற்கு வழக்கறிஞர் ஷேக் முஹம்மது முன்னிலை வகித்தார். ரெப்கோ வங்கியின் வீட்டுக் கடன் பிரிவு முதன்மை மேலாளர் கோபிகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களும், ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கடன் திட்டங்களை அதிகாரிகள் இடம் கேட்டறிந்தார்கள். நிறுவனத்தின் ஊழியர் ஹரிஹரன் நன்றி கூறினார்.


