மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டிருந்தது இந்த பள்ளம் காரணமாக பள்ளி மாணவிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையின் நடுவே முழங்கால் அளவு இருந்த பள்ளத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு பள்ளத்தை சரி செய்தனர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தை சரி செய்த அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதேபோன்று சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களையும் கிராம பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகளில் திடீரென ஏற்படும் பள்ளங்களையும் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)