• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் கே.டி.ஆர் பேச்சு ….*

ByK Kaliraj

Aug 27, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

துளி அளவு கூட என் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பாக கவசமாக இருப்போம். உங்களின் மீது வருகின்ற எதிர்ப்புகளை தடுக்கின்ற கேடயமாக இருப்போம்.

பதவிக்காக, அதிகாரத்திற்காக பழகிய பந்த பாசத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் எண்ணம் கிடையாது.

நான் எந்த இடத்தில் இருந்தாலும் சித்தப்பு , அப்பு உறவுமுறையை முறித்த முடியாது.அந்த அளவுக்கு தொப்புள் கொடி உறவுகளாக நாம் வாழ்ந்து வருகிறோம்.

அரசியலில் சில மாற்றங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணிகள் இவையெல்லாம் வரும் மாறும். ஆனால் நிலையான அன்பு என்பது இஸ்லாமியர்கள் மத்தியில் எனக்கு உள்ளது.

என்னை பிடிக்காதவர்கள் சில குறைகளை உங்களிடம் சொல்வார்கள் அதையெல்லாம் நீங்கள் பொறுட்படுத்தாதீர்கள்.

இஸ்லாமியர் மத்தியில் இருக்கும் என் மீதான பாசத்தை அன்பை என்றும் தக்க வைக்கும் என்னுடைய அரசியல் நடவடிக்கைகள் இருக்கும்.ஒருபோதும் அதற்கு பாதகமாக நடந்து கொள்ள மாட்டேன்.

அரசியலுக்காக ஒருபோதும் நான் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.உங்களுக்கு துணையாக நான் இருப்பேன்.