• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!

ByA.Tamilselvan

Aug 26, 2022

தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கொச்சை படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை ஆளுநர் தொடர்தால் அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் என்று கே.எஸ் . அழகிரி எச்சரித்துள்ளார்.திருக்குறளை திரித்து பொழிபெயர்த்ததாக ஜி.யு.போப் மீது குற்றம் சாட்டிய ஆர்.என்.ரவிக்கு தன்னுடைய கண்டங்களை அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ஆர்.எஸ்.எஸ்.முகத்தை ரவி அவ்வப்போது காட்டுகிறார். என்று குற்றம்சாட்டிய அவர் இதை தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.