• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சூரி நாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி

Byதன பாலன்

Mar 10, 2023

விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி கதை நாயகனாக நடித்து முடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதைக்கு சூரி பொருத்தமாக இருப்பதால் அவரை நடிக்க வைத்ததாத வெற்றிமாறன் கூறியிருந்தார். ஒரு படம் என்பது விடுதலை இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது படத்தின் தொலைக்காட்சி, ஓடிடி உரிமை மட்டும் 50 கோடி ரூபாய்க்கு ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது கதாநாயகன், காமெடியன் இரண்டுமே நடிப்புதான் அதனால் கதாநாயகனாக தொடர்ந்து நடிப்பேன் என விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூரி பேசியிருந்தார் இந்த நிலையில்நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் ஒரு படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது

‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இந்தபடத்திற்கு “கொட்டுக்காளி” என பெயரிட்டுள்ளனர். சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகையான அன்னா பென் நடிக்கிறார். இது சம்பந்தமாக சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம்.

அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்.

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறும்போது, ​​“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது என்றார்.