• Sun. Oct 6th, 2024

தேர்தல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய சங்கங்கள் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1978 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் ஆதரவுடன் தொடங்கப்பட்ட” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” தான் அதிகாரம் மிக்க அமைப்பாக இருந்து வந்தது.

இன்றைய கால சூழலுக்கு ஏற்ப சங்க நடவடிக்கைகளை மாற்ற முயற்சித்தாலும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முயலும்போது அதனை அமுல்படுத்தவிடாமல் ஒரு கூட்டம் தடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எப்போதோ ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட தயாரிப்பாளர்கள் படத்தயாரிப்பை கைவிட்டிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை இருக்கும் தற்போதைய நிலை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை அவர்கள் தான் இதனை செய்துகொண்டிருந்தார்கள்.இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தனியாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனும் பெயரில் தனியான அமைப்பு தொடங்கப்பட்டு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இயங்கிவருகிறது.

இருந்த போதிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவிற்கும் தலைமை அமைப்பாகவும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சங்கமாக உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்திற்கான தேர்தல் 26.03.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது கெளரவசெயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது அதனால் தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தேர்தல் தேதியை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளனர் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.இதற்காக அணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி ராமசாமியும் இரண்டுதுணைத்தலைவர்கள் பதவிக்குலைகா தலைமை நிர்வாகிதமிழ்க்குமரன், மற்றும் ஏ.ஜி.எஸ். அர்ச்சனாகல்பாத்தி ஆகியோரும்,கௌரவசெயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோரும்பொருளாளராக தற்போது பதவி வகித்து வரும் சந்திரபிரகாஷ்ஜெயின் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவிருக்கிறார்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சௌந்திரபாண்டியன் அல்லது ஒய்நாட் சசியை நிற்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறதுமற்றொரு அணி தற்போது கௌரவ செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் ட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறதுஅந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும்
இரண்டு கௌரவசெயலாளர் பதவிக்கு தேனப்பன், சிங்காரவடிவேலன் இரண்டு துணைத்தலைவர் பதவிக்கு மைக்கேல் ராயப்பன், விடியல்ராஜுபொருளாளர் பதவிக்கு
கமீலா நாசர் ஆகியோர் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

மன்னன் ஒருங்கிணைக்கும் அணியில் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரில் ஒருவரை போட்டியிட வைக்க மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவருமே மறுத்து விட்டதால் வேறுவழியின்றி கெளரவ செயலாளராக இருக்கும் மன்னன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என கூறப்படுகிறது.தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் என தொடர்ச்சியாக போட்டியிட்டு செயலாளராகவும், பொருளாளராகவும் பதவி வகித்த ராதா கிருஷ்ணன் முரளி ராமசாமி தலைமையிலான அணிக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மன்னன் தலைமையிலான அணி வேட்பாளர்களில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *