• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கோடநாடு கொலை வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

கொடநாடுகொலை வழக்கை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக நீதிபதியிடம் அரசு தரப்பில் கூடுதல் கால அகவசம் கேற்கப்பட்டதால் வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி முருகன் விட்டிருந்தார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று உதகை அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஹாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்தும் வரும் சிபிசிஐடி போலீசார் தரப்பி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும் ஆஜராகினர்.இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் சாட்சிகள் இடையே விசாரணையை நடத்த இருப்பதால் வழக்கினை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.தனிப்படை போலீசார் 320 சாட்சிகளிடம் நடத்திய விசாரணை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.முதல் கட்டமாக 720 தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்த சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.