
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் கலைகட்டி உள்ள நிலையில்,மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் நிலையில்,அடிப்படை வசதிகள் இல்லாததால் கோடைக்காலத்தின் போதும் கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சி சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில்,தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
அவ்வாறு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசித்து விட்டு கோடநாடு காட்சி முறைக்கு வருகை புரிகின்றனர்.இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தலா ஒரு நபருக்கு 30 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில்,இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
மேலும் வாகன நிறுத்தும் இடம் உட்பட போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது.இதே போன்ற நிலையை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
