• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி..,

BySeenu

Jan 11, 2026

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது..

அதன்படி, குழந்தை மாணவ,மாணவிகளுக்கான 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கோவை ஸ்போர்ட் அகாடமி இணைந்து கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக இதன் துவக்க விழா கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் ஸ்டைல் ஹோம் உரிமையாளர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதீமன்ற ஓய்வு பெற்ற முன்னால் நீதியரசர் பாஸ்கரன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரபு சங்கர்,ஜி.எஸ்.டி.துணை ஆணையர் டோலா திருப்பதி, கொடிசியா முன்னால் தலைவர் முத்துசாமி, ரோட்டரி கிளப் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர் சண்முகராஜ்,செயலாளர் பிரேம் செந்தில் ,மற்றும் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி துணை தலைவர் கிருஷ்ணகுமார்,செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்..

ஒரு நாள் போட்டியாக நடைபெற்ற இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 பள்ளிகளில் இருந்தும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..

ஜூனியர் குழந்தைகளுக்காக நடைபெற்ற இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து குழந்தை மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் தங்களது விளையாட்டு திறன்களை நிரூபித்தனர்…