• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் தலைவரானார் கார்கே

ByA.Tamilselvan

Oct 19, 2022

காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.கட்சி தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.