• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வசூலில் எகிறும் கே.ஜி.எப்-2!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு மத்தியில் படம் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கேரளாவில் மட்டும் 23கோடி வசூல் செய்து ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.