• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற மே மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.