• Sat. Mar 22nd, 2025

கேரளாவின் புகழ் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா.

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தின் அருகில் இருக்கும் ஆற்றுக்கால் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் பொங்கல் உலக புகழ் பெற்றது.

கின்னஸ் நிறுவனம் இரண்டு முறை ஆற்றுக்கால் பொங்கல் வழி பாட்டன்று நேரடியாகவே ஆற்றுக்கால் பகுதிக்கு நேரடியாக வந்து இலட்ச்சக்கணக்கான அடுப்புகள் கோயில் வளாகம் மட்டுமே அல்லாது வழி நெடுக தேசிய நெடுஞ்சாலைகள் என வரிசையாக இருந்த அடுப்புகளில் பொழுது புலரும் நேரத்தில் அடுப்பில் தீ மூட்டி பொங்கல் இடும் வழிபாட்டை பதிவு செய்தது இன்றும் கேரள மக்களின் மத்தியில் ஒரு பேசும் பொருளாக இருக்கிறது.

இவ்வாண்டின் திருவிழா (பெப்ரவரி_17)ம் தேதி காலை 8 மணி அளவில் அம்மனுக்கு காப்பு கெட்டி, குடியிறுத்தி திருவிழா ஆரம்பமாகிறது.

புகழ் பெற்ற பொங்கல் இட்டு வழிபாடு நடத்தும் பொங்கல் விழா (பெப்ரவரி_25)ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

இந்தாண்டு நடக்கும் ஆற்றுக்கால் பொங்கல் விழாவில் 25_லட்சத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொண்டு பொங்கல் இட இருப்பதையும், கேரள அரசு உலக புகழ் பெற்ற பொங்கல் விழா நாளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 க்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபட கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நாகர்கோவிலில் உள்ள செய்தியாளர்கள் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்.ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் நிர்வாக தலைவர் ஷோபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.