• Mon. Oct 2nd, 2023

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

ByKalamegam Viswanathan

Sep 9, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பு டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செவிலியர் நாகலட்சுமிக்கு, டாக்டர் ரகுவீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் நாகலட்சுமியை தாக்கியுள்ளார். இது குறித்து செவிலியர் நாகலட்சுமி, மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணியிடம் புகார் கூறினார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாகலட்சுமி இது குறித்து சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ரகுவீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *