• Thu. May 2nd, 2024

வழிதவறி வந்த அசாம் பெண்ணை உறவினர்களிடம், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் ஒப்படைத்தனர்.

ByKalamegam Viswanathan

Feb 16, 2024

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. கடந்தாண்டு, நவம்பரம் மாதம், வழிதவறி தமிழகம் வந்த இவரை, சுப்ரமணியபுரம் போலீசார் மீட்டு, திருநகரில் உள்ள அடைக்கலம் முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்த ஆதார் முகவரி மற்றும் செல்போன் எண்கள் வாயிலாக, சங்கீதாவின் உறவினர்கள் விபரங்களை அறிய, முதியோர் இல்ல நிர்வாகிகள் முயன்றனர். இதற்கிடையில், சங்கீதாவுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை கண்ட முதியோர் இல்ல நிர்வாகிகள் மதுரை, திருவாதவூரில் உள்ள தனியார் பெண்கள் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மூன்று மாத சிகிச்சை முடிந்த நிலையில், சங்கீதாவின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டறிந்த, தொண்டு நிறுவனத்தினர் சுப்ரமணியபுரம் போலீசார் உதவியுடன், நேற்று காலை, சங்கீதாவை அவரின், உறவினர்களுடன் சேர்த்து வைத்தனர். பின் குடும்பத்துடன் ரயிலில் அவர்கள், அனைவரும் அசாம் புறப்பட்டனர்.

அப்போது, சங்கீதாவை உறவினர்களிடம் ஒப்படைக்க உதவிய திருநகரில் உள்ள அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகி நாகலட்சுமி, நிர்வாகிகள் ரவி, ராஜன், அருண், வித்தோஸ், சமூக ஆர்வலர் விஸ்வா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *