• Wed. Mar 19th, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய கேரள எம்எல்ஏ

By

Sep 2, 2021 ,
Kerala

தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்து மலையாள டிவியில் கேரள எம்.எல்.ஏ விஷ்ணுநாத் புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள ஒரு மலையாள தொலைக்காட்சியில் கேரள அரசின் 100 நாள் சாதனை குறித்த விவாதம் நடந்தது.

இதில் கண்டரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுநாத் பங்கேற்றார். அப்போது, தமிழக அரசு 100 நாட்களில் கேரள அரசு செய்ததை விட பல மடங்கு சாதனைகளை செய்துள்ளது என்று புள்ளி விவரங்களுடன் புகழ்ந்து பேசினார்.

அனைவருக்கும் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்கியது, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஸ்டாலின் அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் கேரளாவில் பினராயி விஜயன் அரசு, இதுபோன்று எந்த மக்கள் நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை குற்றச்சாட்டினார்.