• Fri. Apr 26th, 2024

கொரோனா 2-ம் அலை இன்னும் நிறைவடையவில்லை

By

Sep 2, 2021 ,

கொரோனா 2-ம் அலை இன்னும் நிறைவடையவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,092 பேர் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டின் கொரோனா 2-ம் அலை இன்னும் முடிவடையவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கடந்த வாரம் பதிவான நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69 சதவீதம் கேரளாவில் மட்டும் பதிவாகி உள்ளது என்றார். இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தான் உள்ளனர். கேரளாவில் 2,30,461 பேரும், மகாராஷ்டிராவில் 54,606 பேரும், கர்நாடகாவில் 18,438 பேரும், தமிழ்நாட்டில் 16,620 பேரும், ஆந்திராவில் 14,473 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் 39 மாவட்டங்களில் கொரோனா பரவல் வாராந்திர நேர்மறை சதவீதம் 10-க்கும் அதிகமாக உள்ளது. அதே போல் 38 மாவட்டங்களில் பரவல் வாராந்திர நேர்மறை சதவீதம் 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் இன்னும் நிறைவடையாததால் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உயிர் இழப்பு என்பது தவிர்க்கப்படுகிறது. வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வர உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 16% இளைஞர்கள் தடுப்பூசியை முழுமையாக எடுத்து கொண்டு உள்ளனர். மேலும் 54% இளைஞர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டு உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.38 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 59.29 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து எந்த ஒரு பரிந்துரையும் உலக சுகாதார அமைப்பு கொடுக்கவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *