• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தென்னை மரம் ஏறுவோருக்கு ‘கேரா சுரக்ஷா’ காப்பீடு திட்டம்

Byகாயத்ரி

Dec 28, 2021

தென்னை மரம் ஏறுவோர் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு கூடுதல் கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதனீர் இறக்குபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ‘கேரா சுரக்ஷா’ என்ற காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம் வாயிலாக அமல்படுத்தப்பட்டுள்ள இது, விபத்து காப்பீடு பாலிசி.

இதில், ஒரு லட்சம் ரூபாய் வரை, மருத்துவ கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.தென்ன மர நண்பர்கள் பயிற்சி திட்டம், பதனீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சி திட்டம் ஆகியவற்றின் கீழ், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ், முதலாண்டு பிரீமியம் தொகை, 398.65 ரூபாயை, தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கும்.

ஓராண்டு முடிந்ததும், பிரீமியம் தொகையில் 25 சதவீதமான 99 ரூபாயை செலுத்தி, பாலிசியை பயனாளர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது வரை உள்ள, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், இந்த காப்பீடு திட்டத்தில் பயன் பெறலாம்.இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வேளாண் அதிகாரி, பஞ்சாயத்து தலைவர், சி.பி.எப்., அலுவலக அதிகாரிகள், சி.பி.சி., இயக்குனர்கள் கையெழுத்தை பெற்று, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில், 99 ரூபாய் மதிப்புள்ள டி.டி.,யை தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு அனுப்பி, இந்த காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

மேலும் விபரங்களை www.coconutboard.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளளாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.