

தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
விஜய்யுடன் மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மாஸ்டர், தனுஷுடன் மாறன் போன்ற படங்களில் நடித்தார்.
படங்களை தாண்டி மாளவிகா மோகனன் விதவிதமான போட்டோ ஷுட்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் இடது காலில் மெட்டி அணிந்து ஒரு போட்டோ எடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கு மெட்டி என்பது எவ்வளவு முக்கியம் என தெரியும், இதனால் அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் அவர் காலில் ஒரு பேஷனுக்காக மெட்டி அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.