

டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அதேவேளையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாஷி’. இந்த படத்தில் நடிப்பதோடு, தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்த படத்தின் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணின் மகன் விஷ்ணு இப்படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை அபிஷேக் பச்சன், மோகன்லால், மகேஷ்பாபு, சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். இதில் டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக இருக்கின்றனர். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
