• Mon. Feb 9th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குமரியில் பள்ளிகளிடையே கராத்தே போட்டி..,

மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.
வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது கராத்தே உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்றது. இப்போட்டியை கராத்தே தலைமை பயிற்சியாளர் ஹெச்.ராஜ் தொடக்கி வைத்தார்.

இதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான போட்டியில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்கப்பள்ளி முதலிடத்தையும், மாதவலாயம் மெட்ஸ் தொடக்கப்பள்ளி, கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றனர்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான போட்டியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல் இடத்தையும், அஞ்சுகிராமம் கிறிஸ்ட் சிஎம்ஐ பள்ளி மற்றும் அகஸ்தீஸ்வரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.ஜி.சரிகா தலைமை வகித்தார். இதில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜின்சி ஜோசப், அஞ்சுகிராமம் கிறிஸ்ட் சிஎம்ஐ பள்ளி தாளாளர் டினு கொட்டாசாபரம்பில், இப்பள்ளி முதல்வர் காயத்ரி நாயர், அழகப்பபுரம் தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் புஷ்பலதா, கன்னியாகுமரி சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தர்ஷிதா, கன்னியாகுமரி மேரி இம்மாகுலேட் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மெற்றில்டா, கன்னியாகுமரி பப்ளிக் பள்ளி தாளாளர் கருணா டேவிட், அகஸ்தீசுவரம் ஐஎம்சி கல்வி ஆலோசகர் வி.பானுமதி, அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எல்.சி.உமாராணி, சின்னமுட்டம் புனித தாமஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் தெரேசா அனிதா, வடக்கன்குளம் ஜீஸஸ் பள்ளி முதல்வர் நிஷா நாயர், அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.ராமச்சந்திரன், மகாதானபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சுயம்பு கனி, பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.