கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் நிலாச்சோறு விருந்து குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.

சித்ரா பவுர்ணமி என்பது தமிழ் புத்தாண்டிற்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமியாகும், இது ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், முருகப் பெருமான் திருக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும் முருகன் அருள் பெற திரளான பக்தர்கள் கூடிவருவர்.
கன்னியாகுமரி பழத் தோட்டம் அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று நிலாச் சோறு விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மே 12ஆம் தேதி நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

நிர்மாலய தரிசனம், கணபதி ஹோமம், கலச பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி அங்கி அலங்காரம் லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அன்று மாலை நடைபெற்ற பூஜையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு நிலாச்சோறு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பக்தர்கள் உடன் அமர்ந்து நிலாச்சோறு உண்டார்.
இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், வட்டார தலைவர் டேனியல், நகர தலைவர் விஜயகுமார், தாமஸ், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், கிங்ஸிலின், அரிகிருஷ்ணன் மற்றும் கோயில் தலைவர் கருணாகரன், கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல் முருகன் கோவில் நிர்வாக குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





